Thursday 5 November 2015

புதிய கல்விக்கொள்கை வரைவும் உயர்கல்வியும்

 புதிய கல்விக்கொள்கை வரைவும் உயர்கல்வியும்
பேரா.டாக்டர்.ஆர். ராமானுஜம்
தமிழில்: செ. நடேசன்
    இந்தியஅரசு புதிய கல்விக் கொள்கையை வரைவதற்கான முயற்சிகளைத் துவக்கியுள்ளது. இதைநோக்கிக் கடந்த சிலமாதங்களாக நாடுதழுவிய கலந்தாலோசனைகள் நட்த்தப்பட்டு வருகின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க நடைமுறை. உலகத்தரம் வாய்ந்த கலவியை விரைவில் அடைய நாம் தீவிரமாக இருந்தால், நமது நாட்டின் கல்வியின் நிகழ்முறையில் மிகவும் அவசரமான, தீவிர நடவடிக்கைகள் தேவை. இந்த இலக்கை அடைய உதவுமானால் புதிய கல்விக்கொள்கை வரவேற்கப்படக்கூடியதே.

   ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆவணங்கள் மற்றும் கேள்விப்பட்டியல்கள் ஆகியவற்றின் அறிகுறிகளும், சமிக்ஞைகளும், கலந்தாய்வுக்கூட்டங்களும் இந்தக்கொள்கை எதை அடைவதற்கான நோக்கங்களைக் கொண்டுள்ளது என்பது பற்றிய தீவிரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.   புதிய கல்விக்கொள்கை மற்றும் உயர்கல்வி தொடர்பான பல பிரச்சனைகளை – புதிய கல்விக்கொள்கை எங்கிருந்து தலைமை ஏற்கப்படப் போகிறது? போன்றவற்றை நாம் எழுப்புகிறோம். சுருக்கமாகவும், செறிவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒருசில பிரச்சனைகளை மட்டும் முதன்மைப்படுத்தி நமது கவலையைத் தொகுத்துத் தருகிறோம்.

1.      தரம் (Quality):  தரம் என்பது பல்வேறு பரிமாணக் கருத்தாக்கம் என்று இந்த ஆவணங்களில் குறிப்பிடும்போது  அதன் முழுஆதிக்கமும் தரவரிசை என்பதுபோலக் காணப்படுகிறது. இதுமிகவும் ஒற்றைப்பரிமாணம் கொண்ட்து: உயர்கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதுபற்றிய புரிதல் முழுவதும் இல்லாதது. இதில் கவலைக்குரிய கேள்வியே தரம் என்பது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? என்பதே. அதேநேரத்தில் கல்வியின் அளவுக்கும்  (பெருமளவிலான மக்களுக்குக் கிடைக்கச் செய்வது), எல்லாருக்கும் சம்மான கல்விவாய்ப்புக்கும் தீர்வு காணப்படவேயில்லை. தரம் என்பது உலகளாவிய அல்லது பன்னாட்டுக் கலைத்திட்டம், தரமதிப்பீட்டுச் சான்று, மற்றும் பன்னாட்டுத் தரமுகவர்கள் ( International Rankiing Agencies) உருவாக்கிய தரம் ஆகியவற்றுக்கு இணையாக இருக்கவேண்டும் என்ற பார்வையிலிருந்து பார்க்கப் படுகிறது.
2.      மையப் படுத்துதல் (Centralization ) மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் உள்ளடக்கத்தில் நாம் ஏற்கனவே பார்த்தவாறு, ‘நாடுமுழுவதற்குமான ஒரே சீரான தன்மைமற்றும் பாடத்திட்டத்தை மையப்படுத்துதல் ஆகியவை ஆபத்தான அறிகுறிகள் என்பது குறைத்துச் சொல்வதாகும். கற்பித்தல்-கற்றல் மற்றும் மதிப்பீட்டு முறைகளை மையப்படுத்துதல் என்பது – இன்னொருவகையில் சொல்வதானால் – மேற்பார்வையிடுதல், மதிப்பீடு செய்தல், தரமிடுதல் ஆகியவற்றுக்காக மத்திய முகமைகளைப் பெருக்குதல் ஆகியவை நாடுதழுவிய அளவில் தரத்தை உயர்த்தும் என்று நம்புவது தவறாகும். குறிப்பாக, கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள சுரண்டப்படும் பிரிவினர் அதிகம் உள்ள பகுதிகளில் தரத்தை ஒரே சீரானதன்மை கொண்டதாக மாற்றும் அளவுகோல் ‘உலக அளவிலானதோஅல்லது வேறுவகையானதோ, அதனால் பொதுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தமுடியாது. பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நமது சமுதாயத்தின் பல்வேறுதேசியஇன்ங்களின் குணாம்சங்களைக் கொண்டுள்ள, அதிகாரப் பரவல்கொண்ட பலவகைப்பட்ட உத்திகளே நமக்குத் தேவை.
3.      (வணிக)நிறுவன மயமாக்குதல்:Corporatization) பொதுவான அணுகுமுறை நிர்வாகவியலாக உள்ளது: கல்வியியலாக அல்ல. பிரச்சனைகளைப் பார்க்கும்தன்மை கல்வியை நிர்வகிக்கும் ஒருபிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. விதிவிலக்கின்றி அதிக எண்ணிக்கையிலான பயன், வெற்றிக்கு இட்டுச்செல்லுதல், நிறைவேற்றுதல், பங்குதாரர்கள், உற்பத்தியைப் பெருக்குதல் என்றுபேசுவது மிக உயர்ந்த வணிக வளாகமாக்குவது என்ற பார்வையையே தருகிறது. இங்கு உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள் பற்றிய மிக்க்குறைந்த விவாதங்களே நடைபெறுகின்றன.
உயர்கல்வியில் கல்வித்துறை நிர்வாகம் என்பது மிகவும் முக்கியமானது. அது வெறும் நிர்வகித்தல் பற்றிய பிரச்சனை அல்ல.
4.      விரிவுபடுத்துதலும், சரிசம்மாக நட்த்துதலும் (Expansion and Equitability) சமுதாயபாரபட்சம் – குறிப்பாக பாலினம், சாதி, மதச்சிறுபான்மையினர் – என்ற கோடாரியின் காரணமாக உயர்கல்வியில் இந்தப்பிரிவினரின் குறைந்தபட்சப் பங்கேற்பு மற்றும் இந்தப்பிரிவினரிலிருந்து கற்பவர்களைக் கொண்டுவரத் தேவையான மாபெரும் முயற்சிகளைப் மிகப்பெரிய அளவில் பரவலாக்குதல் ஆகியவை இந்தப் புதிய கல்விக்கொள்கை ஆவணத்தில் தீவிரமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடவில்லை. எடுத்துக்காட்டாக: பாலியல் பரிமாணம் வெற்றுச்சொல்லாக ஒரு சட்டம், ஒழுங்குப் பிரச்சனையாகத் தாழ்த்தப்பட்டுள்ளது. இந்தக்கேள்வியைப் பரிசீலியுங்கள்: ‘கல்வி வளாகங்கள் பாதுகாப்பானதகவும், பத்திரமானதாகவும் உறுதிப்படுத்தப்பட்டால் உயர்கல்வியில் பெண்களின் பங்கேற்பு உயராதா?இங்கு கண்ணுக்குப் புலப்படாத, கேடுவிளைவிக்க்க்கூடிய, ஆதாரமில்லாமல் உண்மை என்று நம்பும் போக்கும், அனைத்தையும் உள்ளடக்கும் போக்கும், தகுதி என்பதும் பழமைவாதங்களாகும். எடுத்துக்காட்டாக, கல்வி உதவித்தொகை  குறிப்பிட்ட சதவீதம் தேவையானவர் களுக்கும், எஞ்சிய சதவீதம் தகுதி அடிப்படையிலும் அளிக்கப்படும்  என்று குறிப்பிடப்படுகிறது.
5.      தொழில்துறைப் பிணைப்பு : (Industry Linkages) கல்வி அமைப்புமுறையிலிருந்து வெளிவரும் பெரும்பாலான மாணவர்கள் ‘வேலை நியமனத்துக்கு ஏற்றவர்களாக இல்லைவேலை செய்யும் வாழ்வுக்குப் பொருத்தமில்லாததாகக் கல்வித்துறை உள்ளடக்கம் பெருகிவருகிறதுஎன்ற சமுதாயத்தின் கவலையை இந்த ஆவணம் சரியாகவும், தெளிவாகவும் முன்வைக்கும்போது, அதற்கான தீர்வுகளை அளிப்பதில் ஆழமான பார்வை இல்லை. எட்டாம் வகுப்புக்குப் பிறகு தொழிற்கல்வி என்றும், கல்வியின் எல்லா அம்சங்களிலும் தொழில்துறையின் பலத்த பங்கேற்பு என்றும் பேசப்படுகிறது. இந்த எல்லாத்திட்டங்களும் மீண்டும் ஒருமுறை ஆபத்துக்களைக் கொண்டுவந்துவிடும். கல்வியின்தன்மை மற்றும் இலக்குகள், உள்ளட்க்க்ம், கல்விஅளிக்கும்முறை ஆகியவை ஆழ்ந்து பார்க்காமல் தீர்வு காணக்கூடிய பிரச்சனைகள் அல்ல  . சமூக அளவில் பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த முன்மொழிவுகளை ஆழ்ந்து கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.
  நமது சமுதாயம் பல நூற்றாண்டுகளாக சாதியை அடிப்படையாக்க்கொண்ட தொழில் பிணைப்புக்களைக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிணைப்பை உடைத்தெறியும் கருவியாக்க் கல்வி இருக்கவேண்டுமேதவிர அவற்றைப் புதுப்பிக்கும் கருவியாக அல்ல.
6.      கலாச்சார ஒருங்கிணைப்பு ( Cultural Integration) இந்த ஆவணத்தின் மிகமுக்கிய ஆய்வுப்பொருளான இது, இந்த அரசிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட ஒன்றும்கூட. இந்த வார்த்தை மிகவும் தெளிவாக முந்தைய ‘சுதந்திர சிந்தனையான ‘தேசிய ஒருமைப்பாடுஎன்பதை இலாவகமாக மாற்றியமைக்கிறது. இது மிகவும் புத்திசாலித்தனமான தந்திரம். இதன்மூலம் இந்திய நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு பிரதேசவாரியான அம்சங்கள் ஆகியவை அங்கீகரிக்கப்படாமல், ‘கலாச்சார தேசியவாதம்என்பதன்மூலம் மாற்றியமைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஒருமுறை ‘ஒரேசீரானஎன்ற தந்திரம் கண்ணுக்குப் புலப்படாதவகையில் பெரும்பான்மையினரின் செயல்திட்ட்த்தைக் கொண்டுவருகிறது. இது மிகப்பெருமளவுக்கு மக்களைப் பிளவுபடுத்துவதாகும்.
   ‘மிகஅவசியமான பல்கலைக் கழகத்துறைகள்’ ‘இறந்தஅல்லது ‘இறந்து கொண்டிருக்கிறமொழிகளைப் பாதுகாத்து அந்தப்பாதையில் மேலும் கீழ்நோக்கிச் செல்லவேண்டும் என்ற குறிப்புரை வழங்கப்படுகிறது. நமது வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்குப்பதிலாக இந்தமுயற்சிகள் எல்லாவற்றையும் ஒன்றுக்குள் இணைக்கும் ஒற்றைத்தன்மையைப் பெரும்பானமைப் பார்வையில் செய்கிறது.
7.       நிதி வழங்குதல் (Financing) அரசின் ஆவணங்களில் ஒன்று உண்மை என்று நம்பவைக்கும் கோட்பாட்டு வாசகத்தோடு துவங்குகிறது. : உயர்கல்விக்கு நிதி முழுவதையும் அளிக்கும் பொறுப்பை அரசாங்கம் மட்டுமே ஏற்றுக்கொள்ளமுடியாது. பொதுமக்கள், தனியார் பங்கேற்பு (Public Private Partnership) ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட்து. இப்போதுள்ள கேள்வி அதற்கு ஒப்புதல் பெறுவது மட்டுமே! இந்தப்பார்வையில் கல்விக்கு நிதி வழங்குது மத்தியமயமாதல், (வணிக) நிறுவனமயமாதல், ‘தரம்என்பதைத் தரவரிசைப்படுத்துவது மற்றும் தொழில்துறைத் தொடர்பு என்று முன்கூறப்பட்ட அம்சங்களை இணைத்துப் பார்க்கவேண்டும். உயர்கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விடுவித்துக்கொள்வது என்பது ஏற்கனவே ஏற்றுக்கொண்ட ஒன்றுபோல் தோன்றுகிறது.
8.      சமூகவிஞ்ஞானங்கள் (Social Sciences) STEM கல்வி (Science, Technology, and Medicine)  அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் இவற்றுடன் கணிதம் ஒருபகுதியாக்கப்பட்டு இந்தத்தளங்களில் தரத்தை உயர்த்துவது – அதுபோலவே தொழில்துறைக்கு இவற்றின் முக்கியத்துவம் மற்றும் விருப்பமான தொழில் என்ற விவாதங்களுடன் ஒருகுறிப்பான ஆர்வத்தைப் பெற்றுள்ளது. மானுடவியல்துறை – சிறப்பாக கலைகள் மற்றும் இசை ஆகியவை நமது நாட்டின் வளமான பாரம்பரியத்தில் இடம்பெற்றுக் கொண்டாடப்படுகின்றன. ‘ஓர் அறைக்குள் யானைஎன்பதுபோல சமூக விஞ்ஞான்ங்களில் என்னென்ன தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது மிக்க்குறைந்த அளவுக்கே இந்த ஆவணத்தில் விவாதிக்கப்படுகிறது. சமூக நீதியும், கடமைப்பொறுப்பும் பொதுவான வார்த்தைகளில் ‘ நிர்வாக வரையறை எனத் தரம் தாழ்த்தபட்டுள்ளன. சமுதாயத்தை ஒருகண்ணாடிபோலப் பிரதிபலித்து, அதன் செயல்பாடுகளை விமர்சிப்பது, அதைக்கட்டமைப்பது, சமுதாயத்திற்கான அதன் பொறுப்புணர்வு என்ற கல்வியாளர்களின் பாத்திரம் இந்தப்புதிய கல்விக்கொள்கை ஆவணத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.
9.      தொழில்நுட்பச்சார்பு(Technomania) தகவல் தொழில்நுட்பத்தைக் கல்வியில் பயன்படுத்துவதும், அவற்றைக் கல்வி நிறுவன்ங்களில் ஆக்கபூர்வமாக்க் கையாளுவதும் விமர்சனமற்ற கவர்ச்சியைப் பெற்றுள்ளதைப்போலத் தோன்றுகிறது. தகவல்தொழில் நுட்பத்தீர்வுகள் அவற்றைப் பெறுவதற்கும் அதனால் தரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அது இல்லாமல் ஒன்றுமில்லை. கல்வியில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதும், தொழில் நுட்பக்கல்வியும் முக்கியமானவை. ஆனால், விமர்சனமின்றித் தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை நாம் பார்க்கிறோம். இது தீங்கு விளைவிக்க்க்கூடியது.
10.  ஆசிரியர்கள் (Teachers)  எல்லா ஆவணங்களும்அவர்கள் கற்றுத்தருவதில்லைஎன்ற குற்றச்சாட்டுக்களோடு இந்தியஆசிரியர்களை ஒருசமுதாயமாகக்கொண்டு ஆழ்ந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. ஆசிரியகளை யார் மதிப்பீடு செய்வது? பெற்றோர்களா? சமுதாயமா? மாணவர்களா? என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. ‘அத்தகையஆசிரியர்கள் எவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும்? என்று மேலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்தக்குரல் முற்றிலும் செயல்பாட்டு அறிக்கையைக் கேட்கும் ஒரு நிறுவன உரிமையாளரின் குரல்போல இருக்கிறது. நாட்டின் ஆழ்ந்த பிரச்சனையான ‘ஆசிரியர்கல்விமற்றும் ‘அதிகாரப்படுத்துதல்ஆகியவை இந்த ஆவணத்தில் கவனம் பெறவேயில்லை.

   மேலும் பொதுவாக வருத்தமளிப்பதில் இவை ஒருசில எடுத்துக்காட்டுக்கள்தான்.ஒரு நிறுவனத்தின் நிர்வாக மாதிரிவிவாதிக்கப்பட்டுக் கல்வித்துறையில் திணிக்கப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட, கலச்சார்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட, சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிற, திறன்சார்ந்த கல்வியில் கீழ்நிலையில் உள்ளஒருவரைப் பங்கேற்பது, அறிவை உருவாக்குவது – இத்தகைய பிரிவுகள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டும். மாற்றுப்பார்வை அழைக்கப்பட வேண்டும். அத்தகைய ஒன்று அறிவியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மூலம் கண்டறியப்பட வேண்டும்.

   கல்விக்கு நிதியளிக்கும் அரசின் கடமைப்பொறுப்பு மற்றும்வலிமையாக பொதுப்பள்ளிகளை உருவாக்கவேண்டிய அதன் செயற்பொறுப்போடு சமரசம் செய்துகொள்ள முடியாது. உலகத்தரம் வாய்ந்த கல்வி என்பது மக்களுக்கு அளிக்கபடும் ஆதாயமல்ல: அது தவிர்க்கமுடியாத உரிமை ஆகும். அதுபோலவே நாட்டில் உயர்கல்வியை வலுப்படுத்துவதும் அரசின் தவிர்க்க முடியாத உடனடிக் கடமை ஆகும்.  


 

No comments:

Post a Comment